கோவை நவ, 27
கோவை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய கடிதத்தில் சொந்த காரணங்களுக்கு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பாலாஜி உத்தம ராமசாமியை விடுவிப்பதாக அறிவித்த அண்ணாமலை புதிய தலைவராக கோவை நகர் மாவட்ட பொது செயலாளர் ஆக இருந்த ரமேஷ் குமாரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.