மதுரை நவ, 26
மதுரை கள்ளழகர் கோவிலில் இசையமைப்பாளர் தேவா சுவாமி தரிசனம் செய்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் அவளை அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க போட்டி போட்டதால் அந்த இடம் சிறிது பரபரப்புடன் காணப்பட்டது. கோவில் நிர்வாகிகள் அவரை மீட்டு, சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். மதுரை வரும் போதெல்லாம் கள்ளழகர் கோவிலுக்கு தேவா வருவதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.