சென்னை நவ, 26
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.