திருவாரூர் நவ, 24
திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவை ஒட்டி இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து, இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் டிசம்பர் 2-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.