பசும்பொன் நவ, 25
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் நேற்று மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு, நினைவிடப் பொறுப்பாளர்களான காந்தி மீனாள், தங்கவேல் ஆகியோரை சந்தித்து உரையாடினார். மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் மாவட்ட பொது செயலாளர் மணிமாறன் உட்பட பலர் உடன் சென்றனர்.