சென்னை நவ, 24
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. அத்துடன் படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் வந்தது. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் ஓரிரு நாட்கள் தேவை என்று கவுதம் வாசுதேவன் என தெரிவித்துள்ளார்.