சென்னை நவ, 23
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினியின் 160 ஆவது படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். நெல்லை கன்னியாகுமரி மும்பை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் இஸ்லாமிய காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லால் சலாம் படத்திலும் ரஜினி இஸ்லாமியராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.