கோவை நவ, 22
சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக கோவையில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தங்களை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டு உடனே மருத்துவமனை அணுக வேண்டும் என எச்சரித்துள்ளது.