ராமநாதபுரம் நவ, 23
ராமநாதபுரம் சி எஸ் ஐ கல்வியல் கல்லூரி வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர் சேர்ப்பு சந்தேகங்களுக்கு தேர்தல் மையக் கட்டுப்பாட்டு எண் 1950ல் தொடர்பு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோட்டாட்சியர் கோபு, தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், கல்லூரி முதல்வர் ஆனந்த், விரிவுரையாளர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.