புதுடெல்லி நவ, 22
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 18 காசுகள் சரிந்து கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், 83.32 ரூபாயாக சரிவை கண்டுள்ளது. இந்திய சந்தையில் இருந்து எப்டிஐ வெளியேறுவதும், பங்குச் சந்தை சரிவு, வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தை மதிப்பு குறைந்தது போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் ரூபாய் மதிப்பு சரிந்ததாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.