குன்னூர் நவ, 21
குன்னூர் அருகே மலைப்பாதையில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இந்திய விமானப்படை ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 14 பேர் இறந்தனர். அவர்களின் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விழுந்த அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சின்னம் நினைவு தினமான டிசம்பர் எட்டாம் தேதி திறக்கப்பட உள்ளது.