நெல்லை நவ, 20
நெல்லை அருகே அத்தாளநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கள், பாண்டிய மன்னர்கள் கல்வெட்டுகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. சேரன்மகாதேவி அடுத்த அத்தாள நல்லூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் கல்வெட்டு ஆய்வு நடந்தது. கோவிலில் இறைவன் கஜேந்திர வரதராஜ பெருமாள் முதலையிடம் இருந்து யானையைக் காப்பாற்றிய கல்வெட்டுகளில், ஆனைக்கு அருள் செய்த பிரான் என குறிப்பிடப்பட்டுள்ளது.