சென்னை நவ, 17
கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர்களுக்கு அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களை பெற பயிற்சி மருத்துவர்களுக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு கோவிட் பணி சான்று வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பயிற்சி மருத்துவர்கள் பத்து நாட்களில் அதிகாரிகளை அணுகி பணி சான்றிதழ் பெறலாம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.