சென்னை நவ, 17
MBBS சீட் குறித்த உத்தரவு நிறுத்தி வைத்தது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார். 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் சீட் மட்டுமே என்ற மத்திய அரசின் அறிவிப்பால் புதிய மருத்துவக் கல்லூரி துவங்க முடியாத நிலை இருந்தது. இதனை உடனடியாக கைவிட கோரி முதல்வர் கடிதம் அனுப்பியதை தொடர்ந்து எம்பிபிஎஸ் இடங்கள் குறித்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.