துபாய் நவ, 15
ஐக்கிய அரபு அமீரக துபாய் பர்துபாய் பகுதியில் உள்ள அல் தவ்ஹீத் அடுக்குமாடி கட்டிடத்தில் Spread Smiles என்ற ஊடகம் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் நிறுவனர் மக்கள் ஆர்ஜே lசாரா சார்பில் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடம் மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் எழுதும் பொருட்கள் சேகரிப்பு பிரசாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த பிரசாரம் துபாயில் கர்ஹுத் பகுதியில் இயங்கி வரும் அமிரக செம்பிறை சங்கம் (Emirates Red Cresent ) அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நோட்டுப் புத்தகங்கள் ஓவியம் நோட்டு புத்தகம், பென்சில், ரப்பர், கலர் பென்சில், ஷார்ப்னர், உள்ளிட்ட பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு தேவையான பொருட்கள் பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 1000 கிலோ எடையுள்ளதாக இருக்கும்.
மேலும் பெறப்பட்ட அத்தனை பொருட்களும் அமிரக செம்பிறை சங்க அலுவலகத்தில் ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனர் மக்கள் ஆர் ஜே சார்பில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் சார்பில் எழுது பொருள் சேகரிப்பிற்கு ஆதரவளித்த அமீர்க்கத்தின் பென்சில் மனிதர் வெங்கட் முன்னிலையில் சேகரித்த 1000 கிலோ கொண்ட எழுத்து பொருட்களை அமீரக செம்பிறை சங்கத்தின் துபாய் மேலாளர் முஹம்மதிடம் ஒப்படைத்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.
மேலும் செய்திகளைப் படிக்க…