சென்னை ஆக, 21
சென்னை அண்ணா நகரில் வாகனமில்லா போக்குவரத்து, நடை பயிற்சி மற்றும் மிதிவண்டி பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடத்திய “மகிழ்ச்சியான தெருக்கள்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வை சென்னை காவல்துறை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஒருங்கிணைந்து நடத்தியது.
இதில் முதலமைச்சர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, இறகு பந்து விளையாடினார். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். முதலமைச்சர் விளையாடியதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.