சென்னை ஆகஸ்ட், 22
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்1 பதவிகளில் 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உடையோர் விரைந்து விண்ணப்பிக்க வேண்டுமாறு தேர்வாணையம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது