சென்னை நவ, 14
கட்டண கொள்கையில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் ரூ. 18 லட்சம் வரை அபராதம் வசூலித்திருக்கிறது என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் பயணிகளிடமிருந்து வசூல் வேட்டைநடத்தியது தொடர்பாக தொடர்ச்சியான புகார்கள் இருந்த நிலையில், நவம்பர் 9 முதல் 12 ம் தேதி வரை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,223 ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது