புதுடெல்லி நவ, 13
உலக கோப்பையில் இந்திய அணி தனது சாதனையை தானே முறியடித்துள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பையில் தொடர்ச்சியாக ஒன்பது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 2003 உலக கோப்பையில் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பெற்ற சாதனையை முறியடித்துள்ளது. 2003 மற்றும் 2007 உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11 வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறுமா என பெரிதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.