செங்கல்பட்டு நவ, 14
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.