சென்னை அக், 29
கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் சூர்யா என் தம்பி கார்த்தி என்னைவிட எல்லாவற்றிலும் சிறந்தவன். ரசிகர்கள் என்னிடமே வந்து உங்களைவிட உங்கள் தம்பியைத்தான் பிடிக்கும் என்பார்கள். என்னை விட கார்த்தி தான் சினிமாவுக்கு அதிக மரியாதை கொடுத்து நடிப்பார் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று பெருமிதம் கொண்டார்.