சென்னை அக், 25
விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் மரணித்தது அனைவரும் அறிந்ததே. 20 ஆண்டுகால நண்பரான மிலன் உயிரிழந்த சம்பவம் நடிகர் அஜித்குமாரை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அஜித் உள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மிலன் மரணம் நிகழ்ந்ததால் பட குழுவினர் அனைவருக்கும் ஹெல்த் செக்கப் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தயாரிப்பு நிறுவன தரப்பில் ரெடி செய்ய சொல்லி இருக்கிறாராம்.