புதுடெல்லி அக், 23
ககன்யான் திட்டத்தில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என ஐஎஸ்ஆர்ஓ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி மூன்று நாட்கள் அங்கேயே தங்க வைத்து மீண்டும் அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கம் ஆகும். அதில் பெண் விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றார் அத்துடன் அதில் ரோபோ ‘வியோமித்ரா’ விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.