சென்னை அக், 21
விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கம் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனா நடிக்கின்றனர். விஜய்க்கு வில்லன்களாக மைக் மோகன் மற்றும், எஸ். ஜே. சூர்யா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.