நெல்லை ஆகஸ்ட், 21
கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலிருந்து அதிமுக அரசியல் வட்டாரம் சூடுபிடிக்க தொடங்கியது. மேலும் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என அறிவித்தது. தொடர்ந்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.சிக்கு அழைப்பு விடுத்தார், அதை ஈ.பி.எஸ். தரப்பினர் நிராகரித்த நிலையில் ஓ.பி.எஸ்., டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் இணைய போவதாக தகவல் வெளியான. இதுதொடர்பாக தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமமுக சார்பாக அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய ஒன்றினைவோம் என்ற வசனத்துடன் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் பாண்டியன், சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி தினகரன் ஆகியோர் படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்போல அதிமுக சார்பாக சசிகலா, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆகியோர் அடங்கிய சுவரொட்டி ஒட்டியுள்ள சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.