சென்னை அக், 18
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இன்று அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி நத்தம் விஸ்வநாதன் உட்பட 82 பேர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.