சென்னை அக், 16
சென்னை, காஞ்சிபுரம் உட்பட நான்கு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்க உள்ளார். கடந்த மாதம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதனால் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் ஆய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு முன்னுரிமை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.