சென்னை அக், 14
காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவதால் தமிழக அரசே பயிர் காப்பீடு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதத்தை பார்த்தால், காப்பீட்டு திட்டங்கள் விவசாயிகளுக்கு அல்ல என்பது புரிகிறது. எனவே தமிழக அரசே காப்பீடு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.