Spread the love

துபாய் அக், 17

ஐக்கிய அரபு அமீரக துபாயில் சகீனா ஈவன்ட்ஸ் ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற Neuro linguistic program (NLP) என்ற வாழ்க்கையினை மாற்றக்கூடிய பயற்சி வகுப்பு கிராண்ட் எக்ஸ்செல்ஸியர் ஹோட்டலில் நடைபெற்றது.

இப்பயிற்சியினை NIPR (National Institute of Technology and research ) அமைப்பின் இயக்குனரும், NLP ன் கிராண்ட் மாஸ்டர் முனைவர் ஹுசைன் பாஷா நடத்தினார்.

இப்பயிற்சியில் குறிப்பாக வாழ்வின் லட்சியத்தினை எவ்வாறு அடைய வேண்டும் , லட்சியத்தினை தெளிவாக தெரிந்துக்கொள்வது எப்படி , SMART Specific Measurable Attainable Relevant Time based இதனை சரியாக பயன்படுத்துவது எப்படி எதிர்மறை சிந்தனையிலிருந்து வெளியேறுவது எப்படி என்று பல நுணுக்கங்கள் பகிரப்பட்டன. இந்த நிகழ்விற்காக அல் அய்னிலிரிந்தும் அபுதாபியிலிருந்தும் வந்திருந்தனர் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.

இந்த நிகழ்வில் அல் அமான் இன்டர்நேஷனல் நிறுவனர் அக்மல் மற்றும் அவர்களுடைய நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர். ஜாகுவார் பிரின்டிங் பிரஸ் நிறுவனர் ஷா, க்ரீன் க்ளோப் நிறுவனரும் சமூக சேவாகியுமான முனைவர் ஜாஸ்மீன், லாபிங் கிளப் சோசியல் மீடியா நிர்வாகிகள் சமீர், எஸ்பிஎஸ் நிஜாம், அஸ்கர், தெரபிஸ்டு கவுன்சலர் பானு அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சகீனா ஈவன்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் நூர் பாத்திமா கூறும்போது , தான் கர்ப்பமாக இருந்த போது வேலை போனதாகவும், அந்த இக்கட்டான சூழ்நிலையில் NLP பயின்றதாகவும் அதன் மூலம் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியதாகவும், அதனால் இந்த பயிற்சியை மில்லியன் மக்களுக்கு கொண்டு செல்வதே வாழ்வின் நோக்கமாகவும் தெரிவித்தார். மேலும் அடுத்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக சகீனா ஈவன்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் நூர் பாத்திமா நன்றி கூறி பயனாளர்களுக்கு உணவு உபசரித்து நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *