இஸ்ரேல் அக், 15
இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த ஒரு வாரமாக தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மூன்று விமானங்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது 274 பயணிகளுடன் இஸ்ரேலில் இருந்து நான்காவது விமானம் டெல்லி புறப்பட்டது. சில மணி நேரங்களில் அந்த விமானம் டெல்லி வந்து சேரும்.