சென்னை அக், 15
விஷால் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் ஓடிடியில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து விஷால் தனது ட்விட்டரில், “திரையரங்குகளை தொடர்ந்து இப்போது மார்க் ஆண்டனி அமேசான் பிரைமிலும் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. ரசிகர்களாகிய உங்கள் அனைவரது வரவேற்புக்கும் மிகப்பெரிய நன்றி” என நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உலக அளவில் இப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.