கேரளா அக், 14
நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜை மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதற்கு, ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கேரளா அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆன்லைனில் அனுமதி பெறாத பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் பக்தர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.