சென்னை அக், 12
பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. அக்டோபர் 31ம் தேதிக்குப் பிறகு பேங்க் ஆஃப் இந்தியா டெபிட் கார்டு செல்லாது. கார்டு முடக்கப்பட்டு விடும். எனவே, நவம்பர் 1ம் தேதிக்கு முன் இந்த வேலையை முடிக்கத் தவறினால், உங்கள் கார்டில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யவோ அல்லது ஏடிஎம்மில் பணம் எடுக்கவோ முடியாது.
ஒருவேளை நீங்கள் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளராக இருந்தால், நவம்பர் 1க்கு முன் உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாகும். இல்லையென்றால், கடைசி தேதிக்குப் பிறகு உங்களால் டெபிட் கார்டைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளது.
வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆன்லைனில் அல்லது ஏடிஎம் மூலமாக மாற்ற முடியாவிட்டால், கிளைக்குச் சென்று நேரடியாக மாற்றலாம். இதற்காக, வங்கிக் கிளைக்குச் சென்று, மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பி, அங்கு கேட்கப்பட்ட தகவல்களைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதனுடன் பாஸ்புக் மற்றும் ஆதார் கார்டு நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலையை முடிக்காவிட்டால் உங்களால் டெபிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது.