மயிலாடுதுறை ஆகஸ்ட், 20
அதிமுக தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் சோழம்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பாரதி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் வரவேற்றுப் பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சக்தி, ஒன்றிய துணை செயலாளர் ராமையன், ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி சுந்தரம், ஒன்றிய பொருளாளர் நெடுஞ்செழியன், துணை செயலாளர் மணிமேகலை உள்பட கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி முடிவில் மாவட்ட பிரதிநிதி சதீஷ்முத்துக்குமார் நன்றி கூறினார்.