மயிலாடுதுறை ஆகஸ்ட், 18
மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் சித்தா்காடு சம்மந்தங்குளம் பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவா் பிரபாகா் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட பொதுச்செயலாளா் பாலு வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா். மாவட்ட அலுவலக செயலாளா் குருகிருஷ்ணா, வா்த்தக பிரிவு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா், மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும் கட்சியின் ஓபிசி அணி மாவட்ட தலைவா் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினா், மாநில துணைத் தலைவா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.