சென்னை அக், 10
பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டாவது நாளாக இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. நேற்று சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பான முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் இன்று கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நாளை துணை மானிய கோரிக்கைக்கு நிதி அமைச்சர் பதிலளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.