சென்னை அக், 10
வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ 70 ரூபாய், அவரைக்காய் கிலோ 60 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோ 32 ரூபாய், சின்ன வெங்காயம் கிலோ 90 ரூபாய், முருங்கைக்காய் கிலோ 80 ரூபாய் என விற்பனையாகிறது. அதே நேரம் தக்காளி, முட்டைகோஸ் ஆகிய காய்களின் விலை குறைந்திருக்கிறது. ஆப்பிள் கிலோ ரூ.120 முதல் ரூ.200 வரை, கொய்யா கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை ஆகிறது.