சென்னை அக், 8
காவிரி பிரச்சனை பூதாகரமாகியுள்ள நிலையில் நாளை நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காவிரி பிரச்சனை குறித்து தீர்மானம் இயற்றப்பட உள்ளது. நடப்பு ஆண்டில் நடைபெறும் இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும் இந்த கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகை, ஆசிரியர்கள் போராட்டம், ஆவின் பிரச்சனை, டாஸ்மாக் பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.