சென்னை அக், 8
தமிழகம் முழுவதும் இன்று ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் விலை வழக்கத்தை விட குறைவாக விற்பனையானது. புரட்டாசி மாதம் என்பதால் மக்கள் அசைவத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். இதனால் ஞாயிறு அதிகாலையில் நடைபெறும் சந்தைகளில் 10 கிலோ எடை கொண்ட ஆடு வெறும் 6000 ரூபாய் முதல் 9000 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல நாட்டுக்கோழி, மீன்கள் உள்ளிட்ட அவற்றின் விலையும் வீழ்ச்சியை கண்டுள்ளன