பாகிஸ்தான் அக், 8
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தாலிப்பான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின், நாட்டை விட்டு வெளியேறிய 17 லட்சம் பேர், பாகிஸ்தானில் அகதிகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 31ம் தேதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் இல்லை எனில் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி கூறியுள்ளார்.