சிரியா அக், 6
சிரியாவில் உள்ள ராணுவ கல்லூரி மீது ஆளில்லா விமான மூலம் நடந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர் . ஹோம்ஸ் நகரில், ராணுவ பட்டமளிப்பு விழாவின் போது இந்த தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடந்த போது ராணுவ மாணவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்புகளே காரணம் என சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.