நைஜர் அக், 4
ஆப்பிரிக்க நாடான நைஜரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நைஜரின் அண்டை நாடான மாலி எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததால் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு வீசினர். இந்த தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் பலியாகினர்.