கேரளா அக், 5
கேரளாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஆரஞ்சு நிறத்தில் இருந்ததால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு பின்னணியில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று கூறிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆரஞ்சின் நிறம் கண்களுக்கு மிகவும் தெளிவாக தெரியும் என்பதாலே தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். மேலும் ஐரோப்பாவில் பல ரயில்கள் இந்த நிறங்களில் தான் உள்ளன என்று தெரிவித்தார்.