அகமதாபாத் அக், 5
உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி எஸ் மாலிக் தெரிவித்துள்ளார். அவர் சுமார் 3500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் எங்களுடன் வெடிகுண்டு செயலிழப்பு படை குழுக்களும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.