புதுடெல்லி அக், 2
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்த மோடி இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். நாளை ராஜஸ்தான் செல்கிறார். இதையடுத்து சத்தீஸ்கர் செல்கிறார். இதே போல் காங்கிரஸ் கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.