சென்னை அக், 1
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7’யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கூல் சுரேஷ், அனன்யா ராவ், ஐஷூ, நடிகர் விஷ்ணு, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் சரவணன், நடிகர் பப்லு ப்ரித்விராஜ், லவ் டுடே நடிகை அக்ஷயா உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது.