துபாய் செப், 27
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து அஜித்தும் ஓரிரு நாட்களில் துபாய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அஜித், திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.