சென்னை செப், 27
விஜய் தேவரகொண்டாவின் 12 வது படத்தை ஜெர்சி பட இயக்குனர் கௌதம் தின்னூரி இயக்க உள்ளார். இதில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் விலகியதால் ராஷ்மிகா மந்தனாவை பட குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீதா கோவிந்தம் டியர் காம்ரேட் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஜோடி இணைய உள்ள தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.