புதுடெல்லி செப், 27
இந்தியாவின் ராஜதந்திரம் 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் விழா ஒன்றில் பேசிய அவர், இன்றைய சூழலில் பல நாடுகளை ஒன்றிணைப்பது சாதாரணம் அல்ல எனவும் ஆனால் ஜி-20 மாநாடு அதை சாதித்ததாகவும் கூறினார். மேலும் இளைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்த மோடி, வாய்ப்பு, திறந்த மனப்பான்மை உள்ள இடங்களில் இளைஞர்கள் முன்னேறுவதாக கூறினார்.