புதுடெல்லி செப், 26
மத்திய பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஏற்கனவே 39 வேட்பாளர்களைக் கொண்ட முதல் கட்ட பட்டியல் வெளியான நிலையில், தற்போது மீண்டும் 39 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாம் கட்ட பட்டியலை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இதனிடையே மத்திய பிரதேசத்தில் போட்டியிட மூன்று மத்திய அமைச்சர்கள் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.